மழைப்பெண்ணே, இத்துனை கஷ்டமாக ஒரு கேள்வியை அனுப்பி விட்டீர்கள். இதை விட விண்மீண்களை எண்ண சொல்லியிருக்கலாம்.
நினைவுகளை அளக்க கோல் ஒன்றும் தெரியவில்லை. எனினும் தட்டி விட்ட நினைவுக்குதிரைகள் வெகு தூரம் இழுத்து சென்று விட்டது. இழுத்து கடிவாளத்தைப் போட்டு விட்டு இந்தோ சில மலரும் நினைவுகள்
இப்படி நடந்திருந்தால்
1. பொறியியல் கல்லூரிக்கு மாறாமல் மருத்துவ கல்லூரியிலே தொடர்ந்து படித்திருந்தால்:
2. சுந்தரை (அவருதாங்க என்ற வீட்டுகாரர்) சந்திக்காமல் இருந்திருந்தால்
3. சென்னையில் வேலை கிடைக்காமல் இருந்திருந்தால்
4. தாய்நாட்டிலே இருந்திருந்தால்
5. மழைப்பெண்ணை சந்திக்காமல் இருந்திருந்தால்
6. வேறென்னங்க இந்தத் தொடரை எழுதிக்கொண்டிருக்க மாட்டேன்
விம்மி பம்மும் தருணங்கள்:
1. “ஜன கன மன” என தேசிய கீதத்தை சினிமாவில் பாட கேட்டாலும் மூச்சு முட்டி நெஞ்சு செருமுவது
2. கல்யாணமாகி மகள் தாய் வீட்டை விட்டு கிளம்பும் பொழுது அனைவரும் கண்ணீருடன் வழியனுப்ப அந்த இடத்தில் என்னையும் எனது குடும்பத்தையும் இருத்தி கண்டு விம்முவது
3. பிள்ளைகள் மேடையில் பரிசு வாங்கும் பொழுது என்னையும் அறியாமல் கண்ணில் வழியும் ஈரத்துளிகளில் பெருமிதப்படுவது
4. நான் செல்லாத குடும்ப நிகழ்ச்சியன்று அனைவருடம் தொலைபேசியில் பேசி, என்னை மட்டும் அனாதையாக இங்கு அனுப்பி விட்டீர்களே என்று குற்றம் சாட்டி கேவுவது
5. பிள்ளைகளின் எதிர்பாராதப் பரிசைப்பார்த்து ”என்ன தவம் செய்தேன் யசோதா” எனக் களிப்பது
6. பிள்ளைகளின் முதல் ஸ்பரிசத்தை இன்றும் உராசிப்பார்த்து பம்முவது
மனதை உராயும் திரைப்பாடல்கள்:
1. மௌனமான நேரம் - சலங்கை ஒலி
2. கண்ணாளனே - பம்பாய்
3. ஏதோ ஒரு பாட்டு - அழகி (என்று நினைக்கிறேன்)
4. ராசாவே உன்னை – வைதேகி காத்திருந்தாள்
5. போகுதே போகுதே - கடலோரக் கவிதைகள்
6. மேகமே மேகமே - பாலைவனச் சோலை
பிடித்த கவிஞர்கள்:
1. கவியரசு கம்பர்
2. பாரதியார்
3. மு. மேத்தா
4. வைரமுத்து
5,6. இன்னும் யாரும் மனதைத் தொடவில்லை
திரும்ப திரும்ப வாசிக்கும் புதினங்கள்:
1. மோகமுள்
2. பச்சைவெயில் மனது
3. மெர்க்குரிப் பூக்கள்
4. செயகாந்தனின் இலக்கிய சிந்தனைகள்
5. Atlas shrugged
6. Fountainhead
இதமாக பரவசமான நேரத்துளிகள்:
1. நீ, இனி ஊருக்கு செல்லவேண்டாம், ஏனெனில் நான் உன்னைக் கல்யாணம் செய்து கொள்ளப்போகிறேன் என்று சுந்தர் சொன்ன நேரம்
2. பெற்றோர் இல்லாமல் கல்யாணம் செய்து கொள்ளவேண்டிய நிலையாகும் போலுள்ளதே என்று விசனப்பட்ட நேரம், நடு இரவு தட்டிய கதவை திறந்த பொழுது நின்ற தாய் தந்தையரைப் பார்த்த பொழுது
3. நீ சூள் கொண்டுள்ளாய் என்று பெண் மருத்துவர் சொன்ன பொழுது
4. இரண்டாவது குழந்தை பெண் என்று பிரசவத்தின் பொழுது இருந்த குழந்தை மருத்துவர் கூறிய பொழுது
5. குடிபெயர்ப்பு விசா கிடைத்துவிட்டது என்ற ஈமெயில் படித்த பொழுது
6. 14 ஆண்டுகள் தேடிய தோழியை, இறுதியில் கண்டுபிடித்து அளவலாவிய நாள் அவளது பிறந்த நாள் என்று அடுத்த நாள் அவளது ஈமெயிலிலிருந்து அறிந்த பொழுது.
போறுங்க இந்த விளையாட்டு…….
நினைவுகளை மடை போட்டு நிறுத்த முடியவில்லை. இதை படிக்கும் அனைவரும் நினைவுகளை அலசுங்களேன்.
Monday, June 26, 2006
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
//பிள்ளைகளின் எதிர்பாராதப் பரிசைப்பார்த்து//
என்ன கொடுப்பார்கள்??
நம்ப நாகப்பட்டினம்தானா?....ஹி! ஹி!! நமக்கும் அதுதானுங்க.
//இதை விட விண்மீண்களை எண்ண சொல்லியிருக்கலாம்.//
அதுக்கு என்ன இப்ப, நான் வேணுமானா சொல்லுறேன்.....
//பொறியியல் கல்லூரிக்கு மாறாமல் மருத்துவ கல்லூரியிலே தொடர்ந்து படித்திருந்தால்://
இந்தியாவின் மக்கள் தொகை சிறிது குறைந்து இருக்கும்.
//“ஜன கன மன” என தேசிய கீதத்தை சினிமாவில் பாட கேட்டாலும் மூச்சு முட்டி நெஞ்சு செருமுவது//
ஜெய்ஹிந்த்!
நினைவாற்றின் ஆறு
படிக்கும் போது என்னமோ சில நினைவுகள் உங்களோடு ஒத்து போகிறது.
முக்கியமாக உங்களுக்கு பிடித்த பாடல்கள்
கதைகள்
சில மறக்கமுடியாத தருணங்கள்.
நன்றாக நினைவை கிளறிவிட்டு விட்டீர்கள்.
நன்றியுடன் வாழ்த்துக்கள்.
Post a Comment