Monday, December 11, 2006

தெரிஞ்சவுங்க சொல்லுங்களேன்!!!–1

மைசூர் பாகு, மைசூர் பாகுன்னு ஒரு இனிப்பு.
செய்ய தெரிஞ்சவங்களையே கிளறி முடிக்கறதுக்குள்ள ஒரு கலவரப் படுத்திவிடும். அம்மா எடுத்தது, தொடுத்ததுக்கெல்லாம் இந்த இனிப்ப பண்ணி போட்டுறுவாங்க. விருந்தாளி வந்துட்டா வீட்டுல ஒண்ணும் இல்லைன்னா, குடுகுடுன்னு ஒரு சட்டி வைச்சு, வந்தவங்க கால், கை கழுவி துடச்சி உட்காரதுக்குள்ள செஞ்சு முடிப்பாங்க. அம்மா பண்ணுற மைசூர் பாகும் அதப் பத்தின சிலாகிப்புமே வந்த விருந்தாளியோட முதல் பேச்சாயிருக்கும். (தஞ்சாவூர்க்காரியா? கொக்கா?)

இது இப்படியிருக்க, போன வாரம் இந்த இனிப்ப நானும் செஞ்சு புள்ளைக பல்லையும் பதம் பார்த்தேன். அப்பதான், புதுசா தமிழ் கத்துக்கிற மகன் இதோட பெயர்க்காரணம் கேட்டாரு. அட, இத்தன நாளு இப்படி யோசித்தது கூட கிடையாது….யோசிக்கும்போது எதனால இப்படி ஒரு பெயருன்னு புலப்படல்ல!!!

ஒரு வேள இப்படியிருக்குமோ!!! அப்பல்லாம் சந்தையில புதுசா வர சாமானுக்கு பேரெல்லாம் பங்ளூரு கத்தரிக்காய், மைசூர் சில்க், பங்களூரு தக்காளின்னு பேரு வைப்பாங்க. அந்த வகையில புதுசா வந்ததுனால மைசூர் பாகுன்னு பேரோ!!!

இப்படியிருக்குமோ, அப்படியிருக்குமோமுன்னு மண்டை காஞ்சதுதான் மிச்சம். டீச்சர கேக்கலாமுன்னா, கடைய மூடிட்டு வனாந்திரம் போயிட்டாங்க!!!!

அட, தெரிஞ்ச யாராவது சொல்லுங்களேன்!!!!

8 comments:

அகில் பூங்குன்றன் said...

ஆஹா... மைசூர்பாகு...நியாபகத்தை கிளறிட்டீங்களே...


பெயர்க்காரணம் எல்லாம் தெரியாதுங்க. ஆனா. எங்க ஊரு மைசூர்பாகு சாப்பிட்டு இருக்கீங்களா...
சும்மா சாப்பிட்டுட்டே இருக்கல்லாம்.


கோயம்புத்தூர் கிருஸ்னா சீவீட்ஸ்... ம்ம்ம்ம்ம்

dondu(#11168674346665545885) said...

Mysore pak is a sweet dish of Karnataka, usually served as dessert. It is made of generous amounts of ghee (clarified butter), sugar and chick pea (besan) flour.

Mysore Pak was first created in the kitchens of the Mysore Palace by a palace cook named Kakasura Madappa out of the above ingredients.

பார்க்க: http://en.wikipedia.org/wiki/Mysore_pak

மைசூர்பாகு என்பது ஆங்கிலத்தில் எழுதும்போது மைசூர்பாக் என்று திரிந்திருக்க வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

லதா said...

masoor dhall-லில் செய்யப்படும் பாகுதான் திரிந்து;-) மைசூர் பாகு என்றாகிவிட்டது என்று அண்மையில் இணையத்தில் (எந்த பதிவில் என்று நினைவில்லை) யாரோ எழுதியிருந்தார்கள். சரியா தவறா என்று தெரியவில்லை.

மா.கலை அரசன் said...

மைசூர் பாக் முதன் முதலில் மைசூரிலிருந்து மற்ற இடங்களுக்கு அறிமுகமானதால் தான் அந்த பெயர் என்று நானும் கேள்விப்பட்டு இருக்கின்றேன்.

கஸ்தூரிப்பெண் said...

//ஆஹா... மைசூர்பாகு...நியாபகத்தை கிளறிட்டீங்களே...//

ஹ்ம்ம்....சரியான பதத்திலதான் கிளறியிருக்கிறேன்....

//கோயம்புத்தூர் கிருஸ்னா சீவீட்ஸ்... ம்ம்ம்ம்ம் //மலரும் நினைவுகள்
இந்த ருசியிலத்தானுங்க, காரண காரியம் மறந்தது.
வருகைக்கு நன்றி, பூங்குன்றனாரே!

கஸ்தூரிப்பெண் said...

நன்றி டோண்டு அவர்களே,
விக்கிபீடியால பார்த்ததுதான், விளக்கம் மனசுக்கு சமாதானமாகயில்ல!!! மைசூர் பாக்குன்ன என்னன்னு சொல்லுதே தவிர, அதனோட பெயர்க்காரணத்த சொல்லயில்ல..... ஒரு சமயம், எழுதுனவரும் மைசூர் பாக்கு மயக்கத்துல இருந்தாரோ என்னவோ?

கஸ்தூரிப்பெண் said...

வாங்க லதா,

//masoor dhall-லில் செய்யப்படும் பாகுதான் திரிந்து;-) // இந்த பருப்பு சிவப்பு கலருல, துவரம் பருப்பு மாதிரியில இருக்கும். மைசூர் பாகு, கடலை மாவுலல்ல செய்வாங்க.
அதனால, இந்த பருப்பெல்லாம் வேகாதுன்னு அந்த பதிவுல எழுதி விடுங்க!!!

கஸ்தூரிப்பெண் said...

நன்றி கலையரசரே!!!

இது ஏதோ ஒரு அளவுக்கு ஒத்துக்கிற மாதிரி இருக்கு!!!!