இயற்கையின் விந்தைகள்தான் எத்தனை!!!!!!
செக்குமாடு போல் சுத்தும்
நமது வாழ்க்கையில்
இந்த விந்தைகளை வியப்பதற்குதான்
நேரமுண்டா?
உடன் எழுகிறோம்
உடன் துயிலுகிறோம்
வரவில்லையென்றால் வருந்துகிறோம்
காட்டம் அதிகமானால் துவளுகிறோம்
அய்யா, வணக்கமுன்னு சொல்லத்தான் நமக்கு நேரமில்லை,
ஏய், அழகாயிருக்கேன்னு சொல்லித்தான் வைப்போமே!!!
உலகம் சுற்றும் வாலிபத் தம்பிக்கு
கல்யாணத்துக்குமுன்ன நேரத்துக்கு பஞ்சமில்ல
அகப்பட்டதெல்லாம் க்ளிக்கினான் – கைப்போட்டியில
அக்கா, இதுதான் அழகுன்னு வண்ணமயமாக்கினான்…..
யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்!!!!
மஞ்சள் வானம் – பேங்காக், தாய்லாந்து
href="http://photos1.blogger.com/blogger/5182/3068/1600/Bangkok_Thailand.jpg">
ஹோஸூர் ஏரிக்கரை
மேட்டூர் அணை மலையடிவாரம்
ஜனாதிபதி மாளிகை - புதுதில்லி
சிங்கை சென்டோஸாத்தீவு
ஷியோஹாமா, டோக்கியோ
கிருஷ்ணகிரி காட்டில்
நரிட்டா விமானநிலையம், ஜப்பான்
அட நம்மூருதாங்க, தைமாச பொங்கலுக்குன்னு வந்த சிறப்பு சூரியனுங்க!!!!!
Thursday, November 09, 2006
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
படங்கள் அருமை. அதைவிடப் பதிவின் தலைப்பு அட்டகாசம்:-)))
எல்லாக் கண்டங்களையும்
கவர் செய்துவிட்டார் உங்கள் தம்பி.
படங்கள் சூப்பர்.
எழுத்துப் பத்தி சொல்ல எனக்கு வயசு பத்தாது:-00)))
நன்றி கஸ்தூரிப் பெண்ணே.
எல்லா படங்களிலும் முன்புலம் கருமை,பின்புலம் "பளிச்"
அவருக்கு இப்படி எடுப்பது பிடித்திருக்கு போல.
க.பெ அவர்களே
தைப்பொங்கல் படம் அருமையோ அருமை!
மணிரதனம் படத்துல ஏதாச்சும் பார்ட்டைம் வேலை பார்த்தாரா? :-))
//உலகம் சுற்றும் வாலிபத் தம்பிக்கு
கல்யாணத்துக்கு முன்ன நேரத்துக்கு பஞ்சமில்ல
அகப்பட்டதெல்லாம் க்ளிக்கினான்//
:-)))
துளசியக்கா,
புகைப்படம் ஏத்தறதுக்கு ரொம்ப நாளா கஷ்டப்பட்டேன். ஆனா நம்ம பதிவர் கூட்டத்திலதான் நல்ல பயிற்சி கிடைச்சதே!!! இனிமே பாருங்க ஒரே புகைப்படமயம்தான்
வாங்க வல்லிசிம்ஹன் அவர்களே,
//எழுத்துப் பத்தி சொல்ல எனக்கு வயசு பத்தாது:-00)))//
எழுத்த பத்தி பேச வயசு வரம்பு இருக்கா என்ன???? அல்ல எழுதறதுக்கே வயசு வரம்பு தேவையா?
வாங்க குமார்,
எப்படியிருக்கீக?
வானமே எல்லையின்னு இல்லாம, வானமே எனது விருப்பமுன்னு இருப்பவன் தம்பி. பொதுவா இயற்கைபிரியன். மனுஷன் எழுப்புன கட்டிடத்த எப்ப வேணாலும் பாக்கலாமே, வானத்து நிகழ்வு ஒரு ஆச்சரியமான விஷயமில்லையா?
வாங்க கண்ணபிரான்,
//மணிரதனம் படத்துல ஏதாச்சும் பார்ட்டைம் வேலை பார்த்தாரா? :-)//
அதெல்லாமில்லைங்க, அங்கருந்து கற்பனைய காப்பியடிச்சுருப்பான்.....
இத அவ படிக்காம பாத்துக்கணும், இல்லன்னா, இதுதான் சாக்குன்னு பொட்டிய தூக்கிகிட்டு கோலிவுட் கிளம்பிவிடுவான். ஆமாம், மணிரத்னம் இப்ப அங்கதான் இருக்காறா, இல்ல வேற எங்கயாவது டிக்கட் வாங்கிட்டாரா?
///உலகம் சுற்றும் வாலிபத் தம்பிக்கு
கல்யாணத்துக்கு முன்ன நேரத்துக்கு பஞ்சமில்ல
அகப்பட்டதெல்லாம் க்ளிக்கினான்//
:-)))
கண்டுபிடிச்சிட்டீங்களா, இப்பயெல்லாம் ......
படங்கள் அனைத்தும் அருமை.
அருமையான படங்கள்.
Post a Comment