Friday, July 28, 2006

நாங்க ரெடி, 1087 பேரு ரெடியா????

வெனிஸுல பார்ட்டிக்கு எல்லா தயார் செஞ்சாச்சுங்க. ஏற்பாடெல்லாம் எப்படி????
சும்மாவா பின்ன, 500 மணி நேர மைக்ரோசாஃப்ட் ஒவியமாச்சே!!!!

Wednesday, July 26, 2006

வாழ்த்துக்கள் மழைப்பெண்ணெ!!















என்னங்க, மழை வர மாதிரி இருக்குல்ல?
பின்ன இருக்காதா,
மழையோட
பிறந்த நாளன்னக்கி.
வாழ்த்திவிடுவோமே மழைப்பெண்ணை,
“பல்லாண்டு வாழ்க”

Thursday, July 20, 2006

தொலைநோக்கி!!!!

என்னே ஒரு தொலைநோக்கு பார்வை!!!!!!

தலைகீழ் பாடம்!!!!

ஏம்பா எல்லாத்தையும் தலைகீழாவே செய்யுறாங்கோ இந்த பெரிய அண்ணன்கள்??????
வலையில சுத்தி சுத்தி நம்மக்கிட்ட மாட்டிக்கிடிச்சிங்கோ!!!

தலைவலி தாங்கமுடியலிங்கோ, தலைவருக்கு!

Tuesday, July 18, 2006

மரணம் – பரிணாம அறிமுகங்கள்

அறியாத ஐந்து வயசெனக்கு. சக்கரை வியாதியுடன் தாத்தா ஆசுபத்திரி படுக்கையில. மூச்சு விட சிரமப்பட்ட தாத்தாவுக்காக, அப்பா மருத்துவரை கூப்பிட போயிருந்தார். பக்கத்திலிருந்த அத்தை, தாத்தாவுக்கு பாலூத்த சொன்னதினால, தாத்தாவுக்கு பால் ஊத்தினேன் புரியாமலே. அது இப்பொது புரிய வைச்சது, கடைசிப்பாலுன்ன என்னான்னு!!!

சிட்டான எட்டு வயசெனக்கு. மண்டை வெடிக்கும் உச்சி வெயிலில, களத்துமேட்டுல இருந்த மாமாவுக்காக காப்பியுடன் பறந்து போனேன். பாதி வழியில புல்லட்டில் சித்தப்பா, “இந்த வெயிலில போனா கறுப்பா போயிடுவே, இங்க கொண்டா நான் கொண்டு போறன்” என்ற கரிசன உபசரிப்பு. மாட்டேன்னு, கைக்கு ஆப்புடாம ஓடினேன். அதுதான் சித்தப்பாவின் கடைசி வார்த்தைகள் என்னோட. களத்துமேட்டில இருந்து வீட்டுக்கு போகும் முன்னே செய்தி. சித்தப்பா மாரடைப்பில் இறந்துவிட்டாருன்னு. சித்தி அப்போ அறிமுகப்படுத்தி வைத்தாள் அதிர்ச்சின்னா என்னன்னு!!!!

சில்லுகோடு, நொண்டியாட்டமுன்னு தெருவை ரண்டாக்கும் வயசெனக்கு. கூடித்திரிஞ்சு சில்லுகோடு விளையாண்ட மும்தாஜ், தாங்க முடியாத தொண்டை வலின்னு அவதிப்பட்டா. உப்புத்தண்ணி கொப்பளித்து, சுண்ணாம்பு பூசியும் சரியாகலைன்னு பாண்டிக்கு போனா. வழியனுப்புறேன்னு தெரியாமல், இரண்டு பேரும் “பாபி” ஸ்கர்ட் போட்டுருக்கோமுன்னு பெருமப் பட்டேன். மும்தாஜ் திரும்பி வந்தாள் பெட்டியில் பத்திரமாக. பச்சை நிற பெட்டியில் வழியனுப்பிய போதும் புரியல்ல “கேன்சர்”ன்னா என்னான்னு!!!

வீரமுறுக்கேறிய வயசு எனக்கு, வீட்டுக்கு அப்பப்ப மாமாவோட சண்டை போட்டுட்டு வரும் அத்தை, நாலு நாள் கழித்து திரும்ப கீவளூர் போய்விடும். மாமாவோட முட்டக்கண்ணையும், இந்திரா காந்தி மூக்கையும் பார்த்து அரண்டு இவர ஏனத்த கலியாணம் கட்டிக்கிட்ட, பேசாம விட்டுட்டு எங்க கூடவே இருந்துடேன்னு. பொண்னுன்னா பொறும வேணுமுன்னு அத்தை அறிவுரை போதிக்கும். போதித்த அத்தையை அடுத்து பார்த்தது துணி மூட்டையாக ஆசுபத்திரியிலிருந்து. காசு கொடுக்க வில்லையென்று, கோபக்கார மாமா, கடப்பாறையால் அத்தையின் பொறுமையை ஒரேயடியாக குத்தி கொன்னுபோட்டார். இன்னமும் புரியவில்லை ஆத்திரம், பொறுமையின் விலை உயிரான்னு!!!!!

கல்யாண வயதில் அக்கா, அவளுக்கு செய்யும் நகைகளைப் பார்த்து பொறாமைப்படும் இரண்டுங்கெட்டான் வயசெனக்கு. உதிரப்போக்கு அதிகரித்த அக்காவுக்கு, பக்கத்து வீட்டு நர்சம்மா அவசரத்திற்கு போட்ட “ஸ்ட்ரெப்டொபயான்” ஊசி விஷமாகியது. அக்காவின் கண் செருக, கழிவறைக்கு போகவேண்டுமென அவசரப்பட்டாள். அய்யோ அது சாவின் அறிகுறியென அம்மா அலற, அப்பாவின் மடியில அக்கா, அப்பாவின் விரல்களின் 1, 2, 3 நிச்சயம் பண்ணிக்கிட்டிருந்தா. தம்பி, பக்கத்து வீட்டு தொலைபேசியில் ஆம்புலன்சை கூப்பிட, நான் சாமியறையில் தஞ்சம், எனக்கு நகையே வேண்டாம், என்னோட எல்லாத்தையும் அக்காவுக்கே கொடுத்துடறேன், எங்க அக்காவ திருப்பி கொடுத்துடுன்னு. உடனடி சிகிச்சையில் மறுபிறவி எடுத்த அக்கா சொல்லித்தந்தாள், உயிரின் மதிப்பு என்னன்னு!!!!

வாழ்க்கையை புரிந்து கொள்ள முயற்சிக்கும் இருபது வயசெனக்கு. ஓளித்து வைத்து சாராயம் குடிக்கும் மாமாவுக்கு நாற்பது வயசு. சாராய போதையில், எந்த போத்தலுன்னு தெரியாமல், பாலிடிராயில் குடித்தது. உள்ளூர் சண்டயினால பண்ணை வீட்டுக்காரன் ஆசுபத்திரி கூப்பிட்டுட்டு போக கார் கொடுக்கமாட்டேனுட்டான். அடிச்சு பிடிச்சு, மூனாம் நம்பர் பஸ்ஸில பெரியாஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போனாங்க. “மங்கை, தெரியாம குடிச்சுபுட்டேன், என்ன எப்படியாவது காப்பாத்துன்னு” மாமாவின் கடைசி வார்த்தைகள். குடியில் எரிஞ்ச குடலிலிருந்து விஷத்தை முறிக்க முடியவில்லை. இப்போது நல்லா புரிகிறது, குடி குடியை மட்டுமல்ல, உயிரையும் குடிக்குமுன்னு!!!!

குடும்பத்துணைவியாக பதவி உயர்வடைந்த இருபத்தெட்டு வயசெனக்கு. தாயாக அடுத்த பதவி உயர்வுக்காக காத்திருந்தோம் நானும், தோழியும். பிரசவ அவஸ்தையில் தோழி ஆசுபத்திரியில். தொப்புள் கொடி கழுத்தை சுத்தி காலில் சுத்தியிருந்ததால், குழந்தை வெளியே வர வர கழுத்தை இறுக்கி, ஸ்டில் பார்ன் குழந்தை. அப்போது புரிந்தது ஜனனத்தில் மரணம் என்னன்னு!!!!!

வாழ்க்கையை வெல்லத் தொடங்கிய, முப்பது வயதெனக்கு. ஊரிலிருந்து தொலைபேசியில் செய்தி, தொன்னூற்றி ஆறு வயது அம்மாதாத்தா இறந்து விட்டாரென. நல்லாதென இருந்தார், என்ன ஆச்சுன்னு புரியாம அழுதபோது, அம்மம்மாவின் சமாதானம். “அழக்கூடாது, தாத்தா நம்மளெல்லாம் விட்டுட்டு சாமிக்கிட்டத்தான் போயிருக்கார், உடனே வரணுமென்ன அவசியம் இல்லை. சாவதானமா கிளம்பி காரியத்திற்கு இருக்கிற மாதிரி வந்தா போதும்”. அப்போது புரிந்தது, முப்பது வயசிலேயும் நாமெல்லாம் ஒரு வகை குழந்தைதானென்னு!!!!!!!!

அவசர வாழ்க்கை முப்பத்தஞ்சு வயசெனக்கு. அலுவலகத்தில தேனீர் இடைவேளியில் தோழியுடன் சின்ன குடும்ப சுமையிறக்கல்கள். தோழியின் கைத்தொலைபேசி அலறியது, வீட்டு வேலைக்காரன் சொன்னான் அவள் கணவருக்கு உடம்பு சரியில்லை, ஆசுபத்திரியில் சேர்த்திருப்பதாக. ஆசுபத்திரியில சொன்னாங்க அவர் மாரடைப்பில் நடு இரவிலேயே இறந்து போனாருன்னு. அவர் இறந்து போனது கூட தெரியாம பக்கத்தில படுத்திருந்திருக்கேன்னு தோழி கதறினா. அன்னைக்கு புரிந்தது மரணபயமுன்ன என்னன்னு!!!!!